டோனியின் கருத்துக்கள் விலை மதிப்பற்றதாக இருக்கும்: விராட் கோலி

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் கேப்டனாக இருந்த டோனி கடந்த 4-ந்தேதி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதன்பின் விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

மூன்று வகை கிரிக்கெட் போட்டிக்கும் கேப்டனாக பதவி ஏற்றுள்ள விராட் கோலி இன்று முதன்முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் டோனி பற்றி கூறுகையில் ‘‘நான் முதலில் என்னுடைய கேப்டனுக்கான நுனுக்கங்களை வெளிப்படுத்துவேன். ஆனால் டோனியின் கருத்துக்கள் விலை மதிப்பற்றதாக இருக்கும். அவருடைய வார்த்தைகள்தான் என்னை டி.ஆர்.எஸ். முறை மீது நம்பிக்கை வைக்க முக்கிய காரணமாக இருந்தது.

கிரிக்கெட் போட்டியில் டோனி ஒரு நுண்ணறிவுமிக்க வீரர். நான் பார்த்ததில் அவருடைய விக்கெட்டுக்காக அப்பீல் 95 சதவீதம் சரியாகத்தான் இருக்கும். டிஆர்எஸ் குறித்து கவலை ஏற்பட்டபோது அவர் மட்டும்தான் எனக்கு நம்பிக்கை அளித்தார். கிரிக்கெட் மைதானத்தில் எங்களுடைய வெளிப்பாடு குறித்து நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். அவருடைய கருத்துக்கள் விலைமதிப்பற்றதாக இருக்கும்’’ என்றார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் புனேவில் நாளை பகல் – இரவு ஆட்டமாக தொடங்குகிறது.