உச்ச நீதிமன்ற தடையை தகர்த்தெறிந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு! நாம் தமிழர் அதிரடி!

தமிழகத்தில் உச்ச நீதிமன்ற தடையை மீறி நாம் தமிழர் கட்சியினர் ஏறு தழுவல் விழாவை முன்னெடுத்து நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழகர்களின் பண்பாட்டு குறியீடான ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஆனால், இந்த வருடம் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டார். இது தமிழக மக்களிடையே சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது கடலூரில் நாம் தமிழர் கட்சியினர் உச்ச நீதிமன்ற தடையை மீறி ஏறு தழுவல் விழாவை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இதற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.