நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக அரசியலில் எந்தவொரு எதிர்காலமும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், ரஜினிகாந்தால் சசிகலாவுக்கு எந்தவொரு நெருக்கடியும் வரப்போவதில்லை என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ரஜினிகாந்த் எந்த விடயத்திலும் உறுதியான நிலைப்பாட்டில் இருந்தது கிடையாது.
அதே போல் தமிழக அரசியலில் எந்தவொரு பங்களிப்பையும் அளித்தது கிடையாது.
இதனால் அவர் அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவுக்கு சவால் என கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.