இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…! மின் இணைப்பை பெறுவதில் புதிய நடைமுறை!!

மின்சார இணைப்பினை பெற்றுக்கொள்வதற்கான செலவீனத்தை கட்டம் கட்டமாக செலுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் தமித குமாரசிங்க இதனை தெரிவித்துள்ளார். இதற்காக விஷேட திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் மின்சார இணைப்பினை பெற்றுக்கொள்ளும் போது பகுதியளவில் கட்டணத்தை செலுத்தி மின் இணைப்பை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 50 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் இந்த திட்டத்தின் ஊடாக சலுகைகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தவணைக் கட்டணம் மற்றும் அதற்கான காலம் என்பன தொடர்பில் அந்த திட்டத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.