தேரர்களும் வீதிக்கு இறங்குவார்கள்! அரசு இனவாதம் பேசுமா? இனவாதம் அழிக்குமா?

தற்போதளவில் உலக நாடுகளிடையே இலங்கைக்கான அடையாளம் என்ன? இலங்கை ஒரு இனத்துவமிக்க நாடு, தமிழர்களுக்கு ஒரு சட்டம்,சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் என்றே அமுல்படுத்தப்படுகின்றது. இச்செயல் இலங்கை அரசின் இயலாமையை காட்டுகின்றது. இதுவே பலரினதும் கருத்தாக அமையும்.

இதற்கு அடிப்படையாக அமைந்த விடயமாகத்தான் அண்மைக்கால அரசியல் போக்கும் அமைந்துள்ளது.

மேலும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பில் என ஆர்ப்பாட்டங்களும் நடந்து முடிந்திருக்கின்றன.

இதுப்போன்ற சம்பவங்கள் இலங்கைக்கு புதிதல்ல, இதுப்போன்ற சம்பவங்கள் பலவும் இதற்கு முன்னர் நடந்துள்ளன.

ஆனால் இலங்கையில் வெடிக்கும் போராட்டங்களில் எல்லாம் அண்மைக்காலமாக தேரர்களின் பங்களிப்பும் மேலோங்கியுள்ளமைதான் ஆச்சரியப்பட வைக்கின்றது.

இலங்கையில் தற்போது முன்னெடுக்கும் ஆட்சிமுறையானது. பொதுக்கட்டமைப்பை வெளிப்படுத்தும் ஆட்சி முறையாகத்தான் அமைந்துள்ளது. குறிப்பாக பிரேமதாச அரசில் எவ்வாறான அரசியல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டதோ அதேப்போன்றதொரு முறைத்தான் தற்போது நடைமுறைப்படத்தப்படுத்தப்படுகின்றது.

அதாவது பிரேமதாச ஆட்சிக்காலத்தில் தேரர்களுக்கு நாட்டின் புனிதமான அங்கிகாரம் வழங்கப்பட்டு நாட்டின் அரசியலில் முக்கியமான இடம் தேர்களுக்கு உரியது என்றே வகைப்படுத்தப்பட்டிருந்தது.

அதேப்போன்றதொரு முறையே தற்போதைய அரசியலிலும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இனவாதம் பேசுவதற்கும் இனவாதம் தூண்டுவதற்கும் தேரர்களே வீதிக்கு இறங்கியுள்ளமைதான் ஆச்சரியப்பட வைக்கின்றது.

இருப்பினும் இன்றும் தேரர்களை புனிதமாக மதிப்பதால்தான் ஆர்ப்பாட்டங்களின் போதும்,தேரர்கள் தாக்கப்படுவதில்லை.

குறிப்பாக அண்மையில் மட்டக்களப்பில் நடந்த தாக்குதலின் போது தேர்ர்கள் தாக்கப்படாமல் வெளியேற்றப்பட்டனர். ஆனால் அதற்கு மாறாகவே இன்றைய ஹம்பாந்தோட்டை சம்பவம் பதிவாகியுள்ளது.

இவ்விடத்தில் இனம், மதம், மொழி பாராமல். மக்களோடு சேர்த்து தேரர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் மேற்கொண்டமைக்காக தேரர்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டது.

இது தான் முக்கிய விடயமாக இன்றைய சூழ்நிலையில் பேசப்படுகின்றது. இனவாதம் தோற்றுவிக்கும் தேரர்கள் மீது ஆரம்ப காலத்திலேயே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

தற்போதளவில் குறித்த விடயம் சிங்கள, தமிழர் பிரச்சினைகளுக்கு எதிர் மறையாக அமைந்துள்ளது. அதாவது ஆர்ப்பாட்டங்களின் போது சாதாரண மக்களைப் போலவே தேரர்களும் கணக்கிடப்பட்டிருக்கிறார்கள்.

இதுப்போன்றதொரு செயற்பாடு எதிர்காலத்திலும் நடக்குமாக இருந்தால் இனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத நாடாக இலங்கையை அடையாளப்படுத்த முடியும்.

தவறுகள் செய்பவர்கள் யாராக இருப்பினும் பாரபட்சம் பார்க்காது தண்டனை வழங்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் இலங்கையை இனவாதம் ஒழித்த முதல் நாடாக அடையாளப்படுத்தலாம்.

இந்நிலைமை இத்தோடு ஓயப் போவதில்லை.எதிர்காலத்தில் தேரர்கள் வீதிக்கு இறங்கலாம். அப்போது இதேபோன்றதொரு செயற்பாட்டை இலங்கை அரசு கொண்டு வருமாக இருந்தால் அது வரலாற்றிற்கு எழுதி வைத்த கல்வெட்டாக அமையும் என்பது மட்டும் உண்மை.