நீ எப்படி அரசியலுக்கு வரன்னு பார்க்கிறோம்! தீபாவை முடக்க சசிகலா தரப்பின் பகீர் பிளான்!!

அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் பொது செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது கட்சியின் மூத்த நிர்வாகிகள் சம்மதத்துடன் நடந்தாலும், கட்சியின் லட்சக்கணக்கான அடிமட்ட தொண்டர்களுக்கு இது பிடிக்கவில்லை என தெரிகிறது.

மேலும், தமிழக முதல்வராகவும் சசிகலா விரைவில் பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சசிகலாவின் தலைமையை பிடிக்காத அதிமுக தொண்டர்கள், அந்த கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.

அதில் சிலர் ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவை அரசியலுக்கு வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அந்த கோரிக்கைகளுக்கு பதிலளித்த தீபா விரைவில் நான் அரசியலுக்கு வருவேன். அதை யாரும் தடுக்க முடியாது என சமீபத்தில் கூறியிருந்தார்.

இதையடுத்து வரும் பிப்ரவவரி 24ஆம் திகதி ஜெயலலிதா பிறந்தநாள் அன்று தீபா அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தீபா அரசியலுக்கு வருவதையும், புதிய கட்சி தொடங்க முடிவெடுத்தால் அதை மிரட்டியாவது தடுத்து விட வேண்டும் என மன்னார்குடி கோஷ்டி தீவிரமாக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.