ஒரு நிமிடத்திற்கு 2 இலட்சம் ரூபா செலவு! கோத்தபாயவின் மறுபக்கம் அம்பலம்!!

பிரபல பாடகர்கள் இருவரினால் நடத்தி செல்லப்படுகின்ற தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 2 கோடியே 76 லட்சம் செலுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு செயலாளரின் வழிக்காட்டலின் கீழ் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை காணி மீட்டல் மற்றும் மேம்பாட்டு சபையினால் நிர்மாணிக்கப்பட்ட பெல்லன்வில நடைபயிற்சி பாதை மற்றும் உணவு பகுதி திறக்கும் நிகழ்விற்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

2014ஆம் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி மாலை 5.30 மணியில் இருந்து மாலை 7.30 மணி வரையிலான இரண்டு மணித்தியாலத்திற்கு இடம்பெற்ற நிகழ்வை ஏற்பாடு செய்வதற்காக, பாரிய அளவு பணம் பாத்திய ஜயகொடி என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

செலவிடப்பட்டுள்ள பணத்திற்கமையவும், அந்த நிகழ்வு இடம்பெற்ற காலத்திற்கமையவும், நிமிடத்திற்கு கிட்டத்தட்ட 2 இலட்சம் ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க தலைமைவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு இவ்வளவு பெரிய அளவிலான பணம், கொள்முதல் நடவடிக்கையினை பின்பற்றாமல் அதற்காக பணிப்பாளர் சபையில் அனுமதி பெறாமலும் செலவிடப்பட்டுளளதாக விசாரணைகளில் வெளியாகியுள்ளது.

‘வெரெஸ்கஹா திட்டம்’ என்ற பெயரில் அபிவிருத்தி திட்டத்தின் பெல்லன்வில பகுதியை திறக்கும் நிகழ்வு அன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வின் விருந்தினர் நடனத்திற்காக ஒரு கோடி 38 இலட்சத்து 45 ஆயிரம் பணம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த நிகழ்வின் இன்னுமொரு அங்கத்திற்காக ஒரு கோடியே 11 லட்சம் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அதே நிகழ்வின் பிறதோரு செயற்பாட்டுக்காக 18 இலட்சத்து 31 ஆயிரம் பணம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மேலதிக செலவிற்காக 8 இலட்சத்திற்கும் அதிக பணம் செலவிடப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில் ஒரு நிகழ்விற்ககாக முழுமையாக செலவிடப்பட்ட முழுமையான தொகை 2 கோடியே 76 லட்சத்து 14 ஆயிரத்து 440 ரூபா பணம் இவ்வாறு செலவிடப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.