எல்லா நாடுகளுடனும் இராஜதந்திர ரீதியான நல்ல உறவுகளைப் பேணிக் கொண்டாலும், எந்த நாட்டினது உத்தரவுக்கும் இலங்கை கீழ்ப்பணியாது என பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், தற்போதைய அரசு பதவிக்கு வந்தது தொடக்கம், அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்துவதில் கவனம் செலுத்தியது.
இதேவேளை, சீனா, இந்தியாவுடனான உறவுகளை விரிவாக்குவதிலும் கவனம் செலுத்தப்பட்டது. நாட்டு மக்களுக்கு எது சிறந்தது என்ற அடிப் படையில் தான் அரசு முடிவுகளை எடுக்குமே தவிர, வெளிநாட்டு அரசுகளின் உத்தரவுக்கு அடிபணிந்து முடிவுகள் எடுக்கப்படாது.
இந்த நாடு எமது மக்களால், எமது அரசினால் நிர்வகிக்கப்படுகின்றது. இலங்கையின் இறைமையை அரசு பாதுகாக்கும்.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசின் கொள்கையினால், எல்லா நாடுகளுடனும் சுமுகமான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள முடிந்துள்ளது.
எவர் மீதும் நாங்கள் கோபத்தில் இல்லை என பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.