வடக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் வாக்களிப்பதற்காக தயாரிக்கப்பட்ட விசேட வாக்காளர்களை பதிவு செய்யும் சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைத்து வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்காக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை செயற்படுத்தும் காலப்பகுதி 2015.06.19ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது.
குறித்த சட்டமூலத்தை அமுல்படுத்துவதற்கான காலத்தை மேலும் 4 வருடங்களுக்கு அதிகரிப்பதற்கும், குறித்த வாக்காளர்களை பதிவு செய்யும் சட்ட மூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.







