இலங்கையில் சனத்தொகை தற்போது அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது.
முக்கணிப்பு உத்தேசங்களுக்கமைவாக 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் பங்கு தற்போது காணப்படும் 12 விகிதத்தில் இருந்து 2020 இல் 16 விகிதத்திற்கும், 2050 இல் 29 விகிதத்திற்கும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையினை முகங்கொடுக்கும் வகையில் சுகாதாரத்துறையினை உரிய முறையில் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.
இதனடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தேசிய முதியோர் சுகாதார கொள்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.







