உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டும் : தேங்காய் உடைத்தது மஹிந்த அணி!

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை அரசாங்கம் உடனடியாக நடத்த வேண்டும் என கடவுளிடம் வேண்டி மஹிந்த ஆதரவு அணியினர் இன்று(03) தேங்காய் உடைத்துள்ளனர்.

மஹிந்த ஆதரவு அணியின் களுத்துறை மாவட்ட உறுப்பினர்கள் சிலர் இன்று பண்டாரகமயிலுள்ள மில்லனிய விஸ்ணு ஆலயத்தில் இவ்வாறு தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில காலமாக இலங்கையில் அரசியல் மாற்றம் கொண்டு வரும் நோக்கில் மஹிந்த அணியினர் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக அரசாங்கத்துக்கு எதிராக பல்வேறான கோரிக்கைகளையும் கொண்டு வருவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். எதிர்காலத்தில் மஹிந்தவை பிரதமராக்கும் நோக்குடனும் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதிலும் இவ்ர்களின் நடவடிக்கை அண்மைக்காலமாக மேலோங்கியுள்ளது.

தேர்தலை கொண்டு வரும் பட்சத்தில் மக்களிடத்தில் நன்மதிப்பை பெற்று அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்பதே மஹிந்த கூட்டனியின் நோக்கமாகும்.

இதேவேளை இவற்றையெல்லாம் எதிர்பார்த்து தற்போது தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.