வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனிப்பட்ட காரணமாக லண்டன், மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பதில் முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (03) வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
மேற்படி சத்தியப்பிரமாண நிகழ்வு யாழ். மாவட்டச் செயலகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இவரின் முதலமைச்சர் பதவியானது எதிர்வரும் மூன்று வாரத்திற்கு நீடிக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.







