உலகின் பிரபஞ்சத்தில் ஐந்து வகை பஞ்ச பூதங்களாக கருதப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற அனைத்தும் நமது உடலில் ஐம்புலன்களாக உள்ளது.
எப்படியெனில் நமது கை விரல்களில், கட்டை விரல் நெருப்பையும், சுட்டு விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிர விரல் நிலத்தையும், சுண்டு விரல் நீரையும் குறிக்கிறது.
எனவே நமது ஐந்து விரல்களில் இருக்கும் இந்த ஐந்து மூலங்களும் சம நிலையில் இருந்தால், நம்முடைய உடல் மற்றும் மனதின் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
தினமும் காலையில் 20 நிமிடங்கள் தியான நிலையில் அமர்ந்து கொண்டு மூச்சை நன்றாக இழுத்து விட்டு இந்த முத்திரைகளை செய்யுங்கள்.
தியான முத்திரை
தியான முறையில் அமர்ந்துக் கொண்டு சுட்டு விரல், கட்டை விரலை தொடுமாறு 20 நிமிடங்கள் கண்களை மூடிக் கொண்டு இருக்க வேண்டும்.
இதனால் மூளையின் திறன் அதிகமாகி, ஞாபக சக்திகள் பெருகும். தூக்கமின்மை நீங்கி மன அமைதி கிடைக்கும்.
வாயு முத்திரை
நமது சுட்டு விரலானது, கட்டை விரலின் அடியை தொடுமாறு வைத்துக் கொண்டு கட்டை விரலை லேசாக சுட்டு விரலை அழுத்துபடி வைத்துக் கொள்ள வேண்டும்.
இதனால் காதுவலி, மூட்டுவலி, ரத்தோட்ட குறைபாடு, செரிமான பிரச்சனை, வாயுத் தொல்லைகள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படுகிறது.
பிருதிவி முத்திரை
நமது மோதிர விரலை கட்டை விரலின் நுனியின் மீது வைத்துக் கொண்டு 20 நிமிடங்கள் தியான நிலையில் அமர வேண்டும்.
இதனால் நமது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். மேலும் மன பதட்டம், மனச் சோர்வு போன்ற பிரச்சனைகள் தீர்ந்து புத்துணர்ச்சிகள் கிடைக்கும்.
வருண் முத்திரை
நம்முடைய கட்டை விரல் மற்றும் சுண்டு விரலின் நுனிகள் ஒன்றாக தொடுமாறு செய்ய வேண்டும்.
இதனால் தோல் நோய்கள், இரைப்பை சார்ந்த கோளாறுகள், உடலின் நீர் வற்றல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுத்து, உடலின் ரத்தத்தை சுத்தமாக்குகிறது.
சூரிய முத்திரை
மோதிர விரலை மடக்கி, அதன் மேல் கட்டை விரலை வைத்து தியான நிலையில் அமர வேண்டும்.
இதனால் செரிமான பிரச்சனைகளை தீர்த்து, கொழுப்புகளின் அளவைக் குறைத்து, உடலுக்கு தேவையான வெப்ப நிலையை தருகின்றது.
பிராண முத்திரை
கட்டை விரலின் நுனியானது, சுண்டு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனியை தொடுமாறு வைத்து கொண்டு தியான நிலையில் அமர வேண்டும்.
இதனால் நரம்புத் தளர்ச்சி மற்றும் சோர்வுத் தன்மை நீங்கி, கூர்மையான கண் பார்வையைத் தருகின்றது.
லிங் முத்திரை
நமது இரண்டு உள்ளங் கைகளின் விரல்களை கோர்த்து இறுக்கி வைத்துக் கொண்டு இடதுக் கையின் பெருவிரலை மட்டும் நிமிர்த்து வைக்க வேண்டும்.
இதனால் தீராத காய்ச்சல் மற்றும் சளிப் பிரச்சனைகளைக் கூட இந்த லிங் முத்திரை குணப்படுத்துகின்றது.
இதய முத்திரை
சுட்டு விரலை கட்டை விரலின் அடியில் வைத்துக் கொண்டு, நடு விரல் மற்றும் மோதிர விரல் இரண்டும் கட்டை விரலின் நுனியை தொடுமாறு வைக்க வேண்டும்.
இதனால் இதயம் வேகமாக துடித்தல், மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான பிரச்சனைகளை வராமல் தடுக்கின்றது.