அ.தி.மு.க.வின் பொதுகுழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று கூடியது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீர்மான நகல் சசிகலாவிடம் வழங்கி, பொதுச் செயலாளராக பொறுப்பேற்க அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை ஏற்று, அதிமுக பொதுச் செயலாளராக நியமனம் ஆவதற்கு சசிகலா ஒப்புக் கொண்டார். அதிமுக பொதுக்குழுவிலும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக டிசம்பர் 31ந்தேதி சசிகலா பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி, 31-ஆம் தேதி மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் இதற்கான விழா நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வில்லை.







