ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதிபதிகள் கூறியது வரவேற்கத்தக்கது: விஜயகாந்த்!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அ.தி.மு.க.வை சேர்ந்த ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாகக்கூறி அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கும், மத்திய-மாநில அரசுகளுக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்து, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது வரவேற்கத்தக்கது.

எனவே மருத்துவமனையில் உள்ள வீடியோ பதிவுகளை உயர்நீதிமன்றத்துக்கு கொடுத்து, அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பொதுமக்களுக்கும் தெளிவுப்படுத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.