உலகின் உயரமான நத்தார் மரம்….! திறந்து வைப்பு!!

உலகின் மிக உயரமான நத்தார் மரம் கொழும்பு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 6வது நாளாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அதனை கோலாகலமாக திறந்து வைத்துள்ளார்.

இலங்கையின் கப்பல் துறை அமைச்சின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ள குறித்த நத்தார் மரம் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சுமார் 238 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த நத்தார் மரம் பல லட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில், பல லட்சம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நத்தார் மரத்தினை இலங்கை இந்திய கடற்பரப்பில் இருந்து எமது லங்காசிறி செய்தி பிரிவினர் பேஸ்புக் வாயிலாக நேரடியாக காட்சிப்படுத்தியுள்ளனர்.