பிரபாகரன் பிரதமராக இருந்திருப்பார்…! விஜயகலா மன்னிப்பு கோர வேண்டும்!!

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய மாகாண அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால், அவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவராக இருப்பார் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த கருத்து தென்னிலங்கை அரசியல் வாதிகளிடத்தில் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களிடத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையிலேயே, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அனைவரிடத்திலும், மன்னிப்பு கோர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.