விஜய் வசந்த் சென்னை-28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துவிட்டார்.
நண்பன், மங்காத்தா போன்ற படங்களில் விஜய், அஜித்துடன் கூட சிறிய ரோலில் நடித்து பெயர் பெற்றவர்.
இந்நிலையில் சமீபத்தில் வந்த சென்னை-28 II படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டது.
இந்த வெற்றியின் உற்சாகத்தில் இந்த வாரம் தான் நடித்த அச்சமின்றி படத்தை களம் இறக்குகிறார், இந்த படமும் இவருக்கு நல்ல பெயரை வாங்கித்தரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.







