பொங்கல் ஸ்பெஷலாக 2017ம் ஆண்டு வெளியாக இருக்கும் படம் இளைய தளபதி விஜய்யின் பைரவா.
பரதன் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, அபர்ணா வினோத்தும் ஒரு வேடத்தில் நடிக்கிறார்.
இவர் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் விஜய் அவர்களை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டபோது, அவர், விஜய் அவர்களை படப்பிடிப்பில் பார்க்கவே முடியவில்லை. ஆனால் அவர் ஒருவரை அனுப்பி என்னிடம் நன்றி தெரிவிக்க கூறியிருக்கிறார்.
நான் பைரவா படத்திற்காக அற்புதமாக பேட்டிகள் கொடுப்பதால் அவர் எனக்கு நன்றி தெரிவிக்க கூறியிருக்கிறார். விஜய் அவர்களுக்கு என்னை தெரிந்திருக்கிறது என்பதே எனக்கு சந்தோஷம் என்று பேட்டியளித்துள்ளார்.







