அரிசி உற்பத்தியில் தன்றிறைவு கண்ட மஹிந்த அரசாங்கம்!

தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் அரிசி உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்திருந்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரிசி விலை உயர்வு குறித்த கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தம் கூறுகையில்…

இரசாயனங்கள் மற்றும் நஞ்சுப் பொருட்கள் கலக்காத அரிசி வகைகளை உட்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றது.

இந்த ஆலோசனை மிகவும் நல்லதொரு ஆலோசனையாகும்.

இவ்வாறு தரமான அரிசி எவ்வாறு என்றாலும் தரம் குறைந்த அரிசியைக் கூட நியாயமான விலைக்கு இன்று சந்தையில் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது.

இன்று வயல் வெளிகளில் மண் நிரப்பப்பட்டு கைத்தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன.

அரிசியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் நெற் செய்கைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

எனது ஆட்சிக் காலத்தில் இலங்கை அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருந்தது.

அரிசியின் விலை வானளவு உயர்ந்துள்ளது. மக்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இரசாயனம் மற்றும் நச்சுப் பொருட்கள் அற்ற அரிசியை நுகருமாறு அரசாங்கம் கோருவது பாண் இல்லையென்றால் கெக் சாப்பிடுங்கள் என்பதற்கு நிகரான நடைமுறைச்சாத்தியமற்ற கோரிக்கையாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.