சாலாவ வெடிப்பு! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை!

சாலாவ ஆயுத கிடங்கு வெடிப்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்த மனு இன்று (29) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.

இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டு சுமார் 6 மாதங்கள் கடந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று வரையும் கணிசமான அளவிலான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக சாலாவ வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சந்தன சூரியஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.