வரி இன்றி அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வரி எதுவுமின்றி அரிசியை இறக்குமதி செய்ய கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார அமைச்சு அனுமதியளித்துள்ளது.
தனியார் துறையினர் வரியின்றி ஒரு லட்சம் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு குறித்த அமைச்சரவை இணைக்குழுவினர் நேற்றைய தினம் கூடி, வரி இன்றி அரிசி இறக்குமதி செய்ய அனுமதி வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
இணைக்குழுவின் செயலாளர் ரீ.எம்.கே.பி. தென்னக்கோன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்திடம் காணப்படும் 10000 மெற்றிக் தொன் எடையுடைய நெல்லை அரிசியாக்க லங்கா சதொச நிறுவனத்திற்கு சந்தர்ப்பம் வழங்க்பபட்டுள்ளது.
அண்மைய நாட்களாக அரிசியின் விலை அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.