ஐ.சி.சி. கனவு அணிகள் : ஒருநாள் அணிக்கு கோலி கேப்டன், டெஸ்ட் அணியில் அஸ்வினுக்கு இடம்!

சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் உலக அளவில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் ஐ.சி.சி. கனவு அணியை ஆண்டு இறுதியில் அறிவித்து வருகிறது. அந்த வகையில் 2016 ஆம் ஆண்டின் ஐ.சி.சி. கனவு அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் ஒருநாள் அணிக்கு விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரவீந்திர ஜடேஜா, ரோகித் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். டெஸ்ட் அணியில் இந்தியாவில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐ.சி.சி டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), அலைஸ்டர் குக் (இங்கிலாந்து) கேப்டன், கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), ஜோ ரூட் (இங்கிலாந்து), ஆடம் வோக்ஸ் (ஆஸ்திரேலியா, பேர்ஸ்டோவ் (இங்கிலாந்து), பென் ஸ்டோக்ஸ்(இங்கிலாந்து), அஷ்வின்(இந்தியா), ரங்கானா ஹெராத்( இலங்கை), மிட்செல் ஸ்டார்க்(இங்கிலாந்து), டேல் ஸ்டைன்(தென் ஆப்பிரிக்கா), 12வது வீரர் ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)

ஐ.சி.சி. ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), குவெண்டன் டி காக்(தென் ஆப்பிரிக்கா), ரோகித் சர்மா(இந்தியா), விராட் கோலி (இந்தியா) கேப்டன், டி வில்லியர்ஸ்(தென் ஆப்பிரிக்கா), ஜோஸ் பட்லர்(இங்கிலாந்து), மிட்செல் மார்ஷ்(ஆஸ்திரேலியா), ரவீந்திர ஜடேஜா(இந்தியா), மிட்செல் ஸ்டார்க்(ஆஸ்திரேலியா), ரபாடா( தென் ஆப்பிரிக்கா), சுனில் நரைன்(வெஸ்ட் இண்டீஸ்), 12வது வீரர்- இம்ரான் தாஹீர்(தென் ஆப்பிரிக்கா).