முன்னாள் பிரதமருக்கு நாமல் வாழ்த்து!

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க, உடல்நிலை பாதிப்பு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள,முன்னாள் பிரதமர் உடனடியாக குணமாகி வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த வாழ்த்து செய்தியை, நாமல் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கின் மூலமாகவே பதிவேற்றம் செய்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவை பார்ப்பதற்காக முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன, நேற்றைய தினம் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.