ராஜபக்ஸ குடும்பத்திற்குள் முறுகல்! கோத்தபாயவுக்கு எதிர்ப்பு வெளியிடும் ஷிரந்தி!

கோத்தபாய ராஜபக்சவின் ஜப்பான் விஜயத்தை தொடர்ந்து ராஜபக்ஸ குடும்பத்திற்குள் சில கொந்தளிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கோத்தபாயவின் விஜயம் தொடர்பில் ரோஹித அபேகுணவர்தனவினால் சமர்பிக்கப்பட்ட முன்னேற்ற அறிக்கையை தொடர்ந்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை விஜேராமையில் அமைந்துள்ள மஹிந்தவின் வீட்டுக்கு சென்ற ரோஹித அபேகுணவர்தன, அறிக்கையை சமர்ப்பித்திருந்தார்.

இதன்போது கோத்தபாயவுக்கு ஜப்பானில் நல்ல வரவேற்பும் அந்தஸ்தும் கிடைத்துள்ளதாக ரோஹித கூறினார்.

கோத்தபாயவை ஜனாதிபதியாக நியமித்து விட்டு என்னை பிரதமராக்குவதற்கே அவர்கள் நினைக்கின்றார்கள். அந்த இடத்தை நோக்கி செல்வதாக எனக்கு தோன்றுகின்றது என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த பிரதமராகினால் கோத்தபாய ஜனாதிபதியாகக் கூடாதென ஷிரந்தி ராஜபக்ஸ பதிலளித்துள்ளார். எனினும் மக்கள் கோத்தபாயவுக்காக உள்ளனர் என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த மீது உள்ள ஈர்ப்பின் அளவே கோத்தபாய மீதும் உள்ளதாக இதன் போது ஷிரந்தி ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் இந்த சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் நாமலும் இருந்துள்ளார் எனினும், அவர் இது தொடர்பில் ஒரு வார்த்தையேனும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நாமல் இந்த சம்பவத்தை தனக்கு நெருக்கமான ஒருவருக்கு கூறியதன் பின்னரே இந்த தகவல் ஊடகங்களுக்கு தெரிய வந்துள்ளதாக குறித்த சிங்கள ஊடகம் ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது.