விசேட உலங்கு வானூர்தியில் திருப்பதி செல்லும் ரணில்!

இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று திருப்பதி செல்லவுள்ளார்.

நேற்று சென்னை சென்றிருந்த பிரதமர் இன்று காலை விசேட உலங்கு வானூர்தி ஊடாக திருப்பதி செல்லவுள்ளார்.

திருப்பதி செல்லும் ரணில், வெங்கடாசலபதி ஆலயத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

சாமி தரிசனம் செய்தார் ரணில்!

நேற்று இரவு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளதுடன், திருமலையில் ரணில் வருகையை ஒட்டி, பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ,பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (22) காலை சாமி தரிசனம் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.