தற்போதைய நிலையில் இலங்கை முழுவதனையும் மைத்திரி விரைவில் கொல்லப்படுவார் என்ற செய்தி அதிக பரபரப்பினை ஏற்படுத்தி வருகின்றது..
அதனையும் பல இணையத்தளங்களும் பத்திரிகைகளும் பலக்கோணங்களில் ஆராய்ந்து வருகின்றது..
இந்நிலையில் அவர் இறக்கப்பபோவதாக ஆருடம் கூறிய ஜோதிடர் பற்றி பல அதிர்ச்சியான உண்மைகள் வெளிவந்துள்ளது…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலைசெய்ய திட்டம்தீட்டி முயற்சித்ததாக இ ரோஹன டி சில்வாவை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. யார் இந்த ரோஹன டி சில்வா? இவருக்கு ஜனாதிபதியை கொல்ல முயற்சிப்பதற்குக் காரணம் என்ன? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
விஜித ரோஹன டி சில்வா, முன்னாள் கடற்படை வீரராக இருந்தவர். 1987ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கை தலைநகர் கொழும்பு சென்றிருந்தார்.
இதன்போது, அங்கு கடற்படை அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது ராஜீவ் காந்தியின் தலையில் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தாக்க முயற்சித்தவர் இந்த ரோஹன் டி சில்வா.
அதிர்ஷ்டவசமாக ராஜீவ் குனிந்ததால் அவரது தோள்பட்டையில் லேசாக துப்பாக்கி முனை தாக்கியது. இந்த குற்றத்திற்காக டி சில்வா இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த சம்பவம் நடைபெற்று 30 ஆண்டுகள் நெருங்கியுள்ள நிலையில், தற்போது, இலங்கை அதிபரை கொல்ல திட்டமிட்டிருப்பதாக ரோஹன டி சில்வா மீது சந்தேகம் ஏற்பட்டு, அவரைக் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2017ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி சிறிசேனவை கொலை செய்ய இவர் திட்டம் போட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, இலங்கையின் தகவல் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் செயலாளரான நிமல் போபேகே கூறுகையில்,
‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்த மாதம் 26ஆம் திகதிக்குள் கொல்லப்படுவார் என ரோஹன டி சில்வா தனது வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதுபற்றி அவர் பொலிஸிலும் புகார் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த 5 மாதங்களாக அவர், இலங்கை அதிபருக்கு எதிராக பிரச்சாரம் நடத்தி வருகிறார்’என்று தெரிவித்தார்.
சிறை தண்டனைக்குப் பின்னர் ரோஹன் டி சில்வா ஜோதிடர் ஆனார். அவரின் ஜோதிடத் திறனை பயன்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் ஜனவரி மாதம் 26ஆம் தேதி கொல்லப்படுவார் என குறிப்பிட்டிருந்தார்.
‘டி சில்வாவின் வெளிப்படையான வலைதள பதிவினால், அதிபருக்கு கூடுதல் பாதுகாப்பும் டி சில்வா மீது குற்றவியல் விசாரணையும் நடத்த வேண்டும்’ என்றும் போபேகே கூறியுள்ளார்.
முன்னாள் அதிபர் ராஜபக்ச இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிடர்களைச் சந்தித்து தேர்தல்பற்றி கேட்டபோது அதை அப்போது சிறிசேன ஏளனம் செய்தார்.
ஆனால், தற்போது ஜோதிடம் என்ற பெயரில் தனக்கு எதிராக பதிவிட்டுள்ள டி சில்வா மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு இசை துறையை முதலில் தேர்ந்தெடுத்த சில்வா அதன்பிறகு ஜோதிடத்தின் மீது இருந்த ஆர்வத்தால் ஜோதிடர் ஆனார்.
டி சில்வாவின் ஜோதிடம் உண்மையா? இல்லை, இலங்கை மக்கள் ஜோதிடத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர் ஏதேனும் திட்டம் தீட்டுகிறாரா?
ஜனாதிபதி கொல்லப்படுவார் என்பதை வெளிப்படையாக வலைதளத்தில் சொல்வது சரியா? இத்தனை கேள்விகளுக்கும் பொலிஸார் விசாரணையின் முடிவில்தான் பதில் கிடைக்க வேண்டும்.
இருப்பினும் இவ்விடயம் தற்போது இலங்கை முழுவதனையும் அதிர்ச்சியடைய செய்துள்ளமை குறுிப்பிடத்தக்கது.
குறிப்பாக இலங்கையில் சீனாவின் உதவியுடன் இராணுவ ஆட்சி ஏற்படப்போகின்றதா என்பதே தற்போதைய கேள்வியாகும்..







