வழமைக்கு திரும்பியது தபால் சேவை!

தபால் வேலைநிறுத்தப் போராட்டங்கள் கைவிடப்பட்டு இன்று அனைத்து ஊழியர்களும் பணிக்கு திரும்புவார்கள் என தபால் தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் சின்தக பண்டார நேற்று ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

தபால் ஊழியர்கள் நாடு தழுவிய ரீதியில் 48 மணித்தியால தொழிற்சங்கப் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திலும் நாட்டின் ஏனைய தபால் காரியாலயங்களிலும் சுமார் 15 லட்சம் தபால்கள் மற்றும் பொதிகள் தேங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தபால்கள் மற்றும் பொதிகளை துரித கதியில் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் சின்தக பண்டார தெரிவித்துள்ளார்.