வார்தா புயல் பாதிப்பால் வீதியில் இறங்கிய இங்கிலாந்து வீரர்கள்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது.

இந்த போட்டிக்கு தயராகும் வகையில் வலைப் பயிற்சிக்காக இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னை வந்தது. ஆனால், வார்தா புயலால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை கடுமையான பாதித்தது. இதனால் வலைப்பயிற்சி நடைபெறாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரண்டு அணியும் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை.

ஆனால், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் வலைப்பயிற்சி பற்றி கவலைப்படவில்லை. வலைப்பயிற்சி இல்லையென்றால் என்ன? எனக்கு ரோடு இருக்கிறது என ரோட்டில் பேட்டிங் பயிற்சி எடுத்துக் கொண்டார்.