ஐரோப்பிய யூனியனுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் எப்போது: பிரிட்டன் விளக்கம்

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி லண்டன் நகரில் பிரிக்ஸிட் எனப்படும் வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில் 52 சதவீதம் பேர் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். 48 சதவீதம் பேர் விலக வேண்டாம் என்று கூறி வாக்களித்தனர்.

இதனையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் பிரிட்டன் அரசு ஈடுபட்டுள்ளது.

இதனிடையே, பிரிக்ஸிட்டுக்கு பின் ஐரோப்பிய யூனியனுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் போட சரியாக 10 ஆண்டுகள் ஆகும் என்ற கருத்துக்கு பிரிட்டன் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய பிரிட்டன் பிரதமர் தெரசா மேவின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஐரோப்பிய யூனியனுடன் புதிய பொருளாதார ஒப்பந்தம் போடுவதற்கு அடுத்து இரண்டு ஆண்டுகளுக்குள் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.