நயன்தாராவின் புதிய ஜோடி இவர்தானாம்!

நயன்தாரா மற்றும் அதர்வா முதல் முறையாக இணைந்து நடிக்கும் இமைக்கா நொடிகள் படம் தற்போது வேகமாக பெங்களூரில் படமாகி வருகிறது.

இந்த படத்தில் நயன்தாரா ஜோடியாக அதர்வா நடிக்கவில்லை, தம்பியாகதான் நடிக்கிறார் என முன்பே கூறியிருந்தனர். மேலும் நயன் ஜோடியாக யார் நடிப்பது என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

தற்போது விஜய் சேதுபதி தான் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.