உங்கள் உடம்பில் ரத்தம் அதிகரிக்கணுமா? அப்போ நீங்க இந்த உணவுகளை சாப்பிடுங்க!

பொதுவாக உடம்பில் ரத்தம் குறைவதால், ரத்தசோகை நோய் ஏற்படுகிறது. ரத்தசோகை நோயானது, அதிகமாக குழந்தைகள், இளம் வயதில் உள்ளவர்கள் மற்றும் குறிப்பாக பெண்கள் ஆகியோர்களை பெரிதளவில் தாக்கி அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

நமது உடம்பில் குறைவான ரத்தம் மற்றும் போதிய அளவு ஊட்டச்சத்துகள் இல்லாமை, வளர்ச்சிதை மாற்றக் கோளாறுகள் போன்ற குறைப்பாடுகளின் மூலம் தான் ரத்தசோகை நோய் ஏற்படுகிறது.

மேலும் ரத்தசோகை பிரச்சனையால், உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை ஏற்படுகிறது.

எனவே ரத்தசோகை நோயை குணப்படுத்தி, நமது உடம்பின் ரத்தத்தை அதிகரிக்க போதிய ஊட்டம் மிகுந்த உணவுகளை சாப்பிட்டாலே போதுமானது.

செம்பருத்தி

செம்பருத்திப் பூவில் நடுவில் இருக்கும் மகரந்தத்தை எடுத்து விட்டு, அதனுடைய இதழ்களை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், நமது உடம்பில் உள்ள இரத்தம் அதிகரித்து, ரத்தசோகை தடுக்கப்படும்.

முருங்கை கீரை

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து அதில் ஒரு கோழிமுட்டை உடைத்து, பின் அதை நன்றாக கலந்து, அதனுடன் சிறிது நெய் சேர்த்து 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இலந்தை பழம்

இலந்தை பழத்தில் உள்ள சத்துக்கள் நமது ரத்தத்தை சுத்தம் செய்வதுடன், நமது உடம்பையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறது. மேலும் இது பசியையும் தூண்டும் தன்மை கொண்டதாக உள்ளது.

விளாம்பழம்

விளாம்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்து, ரத்தம் சுத்தமடைவதுடன், ரத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது.

தேன் மற்றும் இஞ்சி

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நமது உடம்பின் ரத்தம் சுத்தமடைந்து, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.

நாவல்பழம்

நாவல் பழத்தை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால், நமது உடம்பின் ரத்தம் விருத்தி அடைந்து, நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது.

தக்காளி

தினமும் ஒரு தக்காளிப் பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தம் அடைவதுடன், ரத்தசோகை நோய் வராமல் தடுக்கிறது. ஆனால் வாதநோய் உள்ளவர்கள் தக்காளி பழத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.

பீட்ரூட் ஜூஸ்

நாம் பீட்ரூட் ஜூஸை வாரம் இருமுறை சாப்பிடுவதுடன், பொறியல் செய்தும் சாப்பிட்டு வந்தால், நமது உடம்பில் புதிய ரத்தத்தை உற்பத்தியாக்கி, ரத்தசோகை பிரச்சனை வராமல் தடுக்கிறது.