ஆஸ்திரேலிய 20 ஓவர் அணிக்கு பயிற்சியாளராகிறார் மைக் ஹஸ்சி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபத்தில் தனது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதனால் அந்த பயிற்சியாளர் டேரன் சீமேன் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய 20 ஓவர் அணிக்கு முன்னணி வீரர் மைக்கேல் ஹஸ்சி பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இலங்கைக்கு எதிராக 20 ஓவர் போட்டி தொடரில் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. இதற்கு பயிற்சியாளராக மைக்கேல் ஹஸ்சி நியமிக்கப்படுகிறார்.

இதுபற்றி மைக்கேல் ஹஸ்சி கூறுகையில், நான் பயிற்சியாளர் பணியை செய்ய தயாராகவே இருக்கிறேன். ஆனால் முழு நேர பயிற்சியாளர்களுக்கான திறன் என்னிடம் இருக்கிறதா? என்று உறுதியாக கூற முடியாது.

ஏனென்றால் சர்வதேச அணிக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றால் அணியுடன் ஆண்டில் 10 மாதம் பயணம் செய்ய வேண்டும். 20 ஓவர் போட்டி அணிக்கு பயிற்சியாளராக இருந்து முழு பயிற்சியாளராக செயல்படுவேன் என்று நிச்சயமாக சொல்ல முடியாது என்றார்.

இருந்த போதிலும் முதலில் 20 ஓவர் அணிக்கு அவரை பயிற்சியாளராக்கி அதன்பின் ஆஸ்திரேலியாவின் முழு பயிற்சியாளராக்கும் எண்ணத்தில் கிரிக்கெட் வாரியம் இருப்பதாக தெரிகிறது.