இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் டோனி பங்கேற்க முடியாது: புதிய சர்ச்சை

இந்தியாவின் அணித்தலைவர் டோனி, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாது என புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

டெஸ்ட் தொடரை தொடர்ந்து இங்கிலாந்து அணி, இந்தியாவிற்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி புனே உள்ள மைதானத்தில் ஜனவரி 15ம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்திய அணித்தலைவர் டோனி கடைசியாக அக்டோபர் மாதம் 29ல் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்றார்.

அதன்பின் எந்த போட்டியிலும் பங்கேற்காத இவர், பி.சி.சி.ஐ.யின் விதிகளின்படி இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க முடியாது என புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கு இன்னும் ஒருமாதம் உள்ளநிலையில் டோனி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவசியமாகியுள்ளது.