தவளைகளை கொல்லாதீர்கள் அப்படி கொன்றால்? இப்படி ஒன்று நடக்கும்!

தற்காலம் அதிகம் உடல் நல குறைவு வருவதற்கு காரணமாய் இருப்பது கொசுக்கள் தான் என்பது பல கட்ட ஆய்வின் மூலம் நிருபணம் செய்யபட்டுள்ளது.

இப்போது பரவலாக பரவலாக்க பட்டுள்ள காச்சலின் பெயர் டெங்கு காச்சல் அது மிகவும் ஆபத்தானது.

அது பரவும் விதம் வீதிகளில் தேங்கி இருக்கும் தண்ணீர் லிருந்து வீட்டில் இருக்கும் உடைந்த பிளாஸ்டிக் மற்றும் தேங்காய் நார் இவைகளில் தேங்கும் தண்ணீர்களில் இருந்துதான் அத் தண்ணீரில் அமரும் கொசுக்கல் அதிக இனபெருக்கம் பெற்று வீரியம் அடைந்து நம்மை அனைத்து கொள்ள இல்லை ஆளையே கொல்ல ஊருக்குள் உலா வர துவங்குகின்றது.

அது நம்மை கடித்த பின்பு பல்வேறு கொடிய நோய்கள் நம்மை தாக்குகிறது தாக்கும் அந்த கொசுக்களை . கட்டு படுத்த முடியாமல் நாமும் நம்மை ஆளும் அரசும் திணறுகின்றன.

ஆனால் இவைகள் கட்டு படுத்தும் திறன் தவளைக்குதான் உள்ளது. அதாவது தவளைகள் நீர் நிலைகளில் உணவுக்காக இந்த கொசுக்களை பிடித்து உண்டு விடும்.

இது நாள் வரை அப்படி உண்டு வந்ததால் கொசுகளுக்கு குடும்ப கட்டுப்பாடும்., ஊருக்குள் தட்டுப்பாடும் இருந்தது.

ஆனால் விவாசாயத்து அடிக்கப்படும் மிக அதிகமான திறன் கொண்ட விச தன்மை உடைய உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் இவைகளால் நத்தை புழுக்கள் சாவதுடன் அவைகள் உண்ணும் தவளையும் செத்து விடுகின்றன.

அப்படி தவளைகள் சாவதால் நோய் கிருமியை பரப்பும் கொசுக்களை கொன்று உணவிற்காக உண்டு கொசு களை பரவவிடாமல் தடுக்க முடியாமல் போய் விடுகிறது.

எனவே, தவளைகள் வாழ வழிவகை காணுங்கள். இனி தவளைகளை கொல்லாதீர்கள் அப்படி கொன்றால்????? இன்னும் புதுவிதமான நோய்கள் வருவதற்கு காரணம் ஆகிவிடும்.

மனித இழப்புகளும் தவிர்க்க முடியாமல் போய் விடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.