தொண்டையில் உணவு சிக்கி உயிருக்கு போராடிய பெண்! ஹீரோவான பிரபல பாடகர்

பிரித்தானியாவில் பிரபல பாடகர் ஒருவர் தொண்டையில் உணவு சிக்கி உயிருக்கு போராடிய பெண்ணை தக்க சமயத்தில் முதலுதவி அளித்து காப்பாற்றிய சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

X பேக்டர் நட்சத்திரம் OLLY Murs என்ற பாடகரே பெண்ணின் உயிரை காப்பாற்றி ஹீரோவாகியுள்ளார்.

OLLY Murs இரவு உணவு உண்ண உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது, உணவகத்தில் பெண் ஒருவருக்கு தொண்டையில் உணவு சிக்க அவர் மூச்சு விட சிரமப்பட்டு தவித்துள்ளார்.

இதைக்கண்ட OLLY Murs குறித்த பெண்ணிற்கு தக்க சமயத்தில் முதலுதவி அளிக்க பெண்ணின் தொண்டையில் சிக்கியிருந்த உணவு வெளியேறியது.

பின்னர், பாதிக்கப்பட்ட பெண் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். குறித்த நிகழ்வை உணவகத்திலிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

வீடியோவை கண்ட பலர் விரைவாக செயல்பட்ட OLLY Murs ஒரு நிஜ ஹீரோ என பாராட்டி வருகின்றனர்.