ஜனாதிபதி மாளிகையில் கியூபா பிடல் காஸ்ட்ரோவின் படம்..

இலங்கையின் ஜனாதிபதி மாளிகையில், மறைந்த எந்த அரசியல்வாதியும் நினைவுகூரப்படவில்லை எனவும் பிடல் காஸ்ட்ரோ போன்ற முழு மனித சமூகத்தின் கௌரவத்திற்கு பாத்திரமான ஒருவரை நினைவுகூர தான் ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்த தீர்மானித்தாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிடல் காஸ்ட்ரோவின் புகைப்படம் ஒன்றுக்கு மலர் மாலை அணித்து நினைவுகூர்ந்த பின்னர், உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

உலகில் தற்போது காஸ்ட்ரோ இல்லாமல் போனாலும் பொடிஸ்டாக்கள் இருக்கின்றனர்.

லொனின்கள் இல்லாவிட்டாலும் ஷார் மன்னர்கள் இருக்கின்றனர்.காஸ்ட்ரோ தலைவர் என்ற வகையில் கியூபாவில் செய்த மாற்றங்கள் மற்றும் முன்னுதாரணங்கள் காரணமாக அவர் எமக்கு உலகத்திற்கும் முக்கியமானவர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான கியூபா தூதுவர் யுவானா எலியானா, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.