அரசாங்கத்தின் வருமானம் 9.6 சதவீதத்ததால் அதிகரிப்பு!

அரசாங்கத்தின் வருமானம் இந்த வருடத்தில் முதல் ஒன்பது மாத காலத்தில் 9.6 சதவீதத்ததால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இதனை தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நிதி நெருக்கடியையும் எதிர்கொள்ளும் வல்லமையை இலங்கை மத்திய வங்கி கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இந்த விடயங்களை தெரிவித்தார்.

மத்திய வங்கியின் செயற்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் தற்போது நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாத காலத்தில் அரசாங்கத்தின் வருமானம் ஒன்பது தசம் ஆறு சதவீதத்ததால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்த ஆளுநர், வற் உள்ளிட்ட புதிய வரிகள் நடைமுறைப்படுத்தப்பட்டமையே இதற்குக் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.