தேசிய அரசாங்கமாக இணைந்து செயற்பட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொது எதிரி ஐக்கிய தேசியக் கட்சியாகும் என மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
“ நாங்கள் தேசிய அரசாங்கத்தில் இருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சி எமது பொது எதிரி.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் ரீதியான பொது எதிரி. தேசிய அரசாங்கம் என்ற வகையில் இரண்டு பக்கமும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி பதவிக்கு வர ஐக்கிய தேசியக் கட்சி உதவினாலும் அவர் பிறப்பிலேயே அந்த கட்சிக்கு எதிரானவர்.
இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பாக ஜனாதிபதிக்கு இருக்கும் தேவையை பழுதாக்க எவராலும் முடியாது” என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.






