மைத்திரியின் கண்ணாடி குழு தீவிர நடவடிக்கை! ஆபத்தான கட்டத்தில் பல அமைச்சுக்கள்

அடுத்தாண்டு சுதந்திர தினத்திற்கு முன்னதாக அமைச்சரவையில் பாரிய மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அமைச்சர்கள் அல்லது ஐந்திற்கும் மேற்பட்ட அமைச்சுக்களில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அமைச்சு, திணைக்களம் மற்றும் அரச நிறுவனங்கள் தொடர்பில் கண்காணிக்க “கண்ணாடி குழு” என இரகசிய பெயரிலான புலனாய்வு பிரிவு செயற்பட்டு வருகிறது.

அடுத்த ஜனவரி மாதத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கும் வகையிலான விசேட அறிக்கை ஒன்றை இந்த புலனாய்வு குழு தயாரித்து வருகிறது.

கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் நிறுவனங்களின் நிதி நிர்வாகம், மக்கள் தொடர்பு, மக்களின் எதிர்ப்பு ஆகியவை தொடர்பில் தற்போது வரையில் அந்த குழுவினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக அரசியல் தேவைக்காக மக்கள் சேவையை கைவிட்டு மேற்கொள்ளப்படும் வேறு வர்த்தகம், வர்த்தகத்தை முதன்மையாக கொண்டு மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கைகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் கோபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, பொருளாதாரம், கல்வி, மதம், தொழில், விவசாயம், ஆகிய விடயங்கள் தொடர்பிலான பதவிகள் உள்ளடக்கப்பட்ட பதவிகள் சிலவற்றில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.