காய்ச்சல் வந்தால் நல்லது! உடனடியாக இதை செய்து விடுங்கள்

காய்ச்சல் வந்தவுடனே மருந்துகளை உட்கொண்டு உடலின் வெப்பநிலையை குறைக்கத் தான் முயலுவோம்.

ஆனால் அது தவறானது, காய்ச்சல் என்பது நோயல்ல, நமக்கு எதிரானதும் அல்ல.

உண்மையிலேயே காய்ச்சல் வந்தால் நமது உடல், உள்ளே இருக்கும் தேவையற்ற நுண்ணுயிர்களை வெளியேற்றுகிறது.

உடல் வெப்பநிலை சிறிது அதிகமாகும்போது கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப்படுத்தப்படுகிறது,

காய்ச்சல் நோயெதிர்ப்புத்திறனையும் அதிகப்படுத்தி, அதிக வெள்ளையணுக்களையும், Antibody-களையும் உருவாக்குகிறது.

காய்ச்சல் வந்தவுடன் நாம் ஆன்டிபயாடிக்குகளை எடுத்துக் கொள்ளும் போது, குறித்த நுண்ணுயிர்கள் நமது உடலில் தங்கி பெரிய நோய்களை ஏற்படுத்திவிடுகின்றன.

சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6°F (37°C). இது ஆளாளுக்கு, நேரத்திற்கு நேரம் சிறிது மாறுபடலாம்.

ஆனால் இது 100.5°F அல்லது அதற்கு மேலே போகும்போது அதைக் காய்ச்சல் என்கிறோம்.

107.6°F க்கு மேலே வெப்பநிலை சென்றால் தான் மூளையை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

என்ன செய்ய வேண்டும்?

  • சாதாரண காய்ச்சலாக இருப்பின் அதிகளவு நீராகரமும், ஓய்வும் இருந்தாலே தானாக சரியாகிவிடும்.
  • தாகம் எடுத்தால் வெதுவெதுப்பான நீரை பருகவும்.
  • உணவாக இட்லி, அரிசிக் கஞ்சி, இடியாப்பம் உட்கொள்ளலாம், குழம்பு, சட்னிகளை தவிர்க்க வேண்டும்.
  • உடலின் வெப்பநிலை அதிகமாகும் போது, குளிர்ந்த நீரில் துணியை நனைத்து நெற்றியில் வைக்க வேண்டும்.
  • பால் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும்.
  • காய்ச்சலால் குளிர் இருப்பின் கனத்த போர்வையால் மூடக்கூடாது, வெப்பமில்லாத காற்றோட்டான அறையே சிறந்தது.
  • முடிந்த அளவு, குளிர்ந்த திரவ ஆகாரங்கள் குடிக்க கொடுக்கவும். இது காய்ச்சலால் உண்டாகும் நீரிழப்பை ஈடு செய்யும், சளி கெட்டியாகாமல் வெளியேற உதவும்.
  • காய்ச்சல் சரியானவுடன் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடிய புரத உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.