அஜித்தின் ஆலுமா டோலுமாவுக்கு ஒரு கோடி

அஜித்தின் ‘வேதாளம்’ கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படம் சமீபத்தில் இந்தியிலும் டப் செய்து வெற்றி பெற்றதால் அஜித் அகில் இந்திய ஸ்டாராகிவிட்டார்.

இந்நிலையில் ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆலுமா டோலுமா’ பாடல் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த பாடலுக்கு யூடியூபில் ஒரு கோடி பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர்.

எத்தனையோ சாதனைகளுக்கு சொந்தக்காரரான அஜித்துக்கு இந்த ஒரு கோடி சாதனை இணைந்ததை அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் தனியாக ஒரு ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.