அமெரிக்காவின் புலனாய்வு விசாரணையில் சிக்கியுள்ள நாமல் ராஜபக்ஷ

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடந்த அரசாங்கத்தின் போது மேற்கொண்ட பாரிய மோசடி ஒன்று தொடர்பில் அமெரிக்காவின் FBI மற்றும் இலங்கையின் FCID இணைந்து விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்சவினால் இலங்கையின் மதிப்பை அதிகரிப்பதற்காக அமெரிக்காவின் Lobby Groupsற்காக மேற்கொண்ட கொடுக்கல் தொடர்பிலேயே இவ்வாறு விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.

இதேவேளை, அமெரிக்காவின் பிரபல Squire Patton Boggs நிறுவனத்திற்காக கொடுக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் குறித்த நிறுவனத்திற்கு மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவாக அமெரிக்க டொலர் மில்லியன் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கொடுப்பனவுகள் தனிப்பட்ட வங்கி கணக்குகளுக்கு செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் இரண்டு இலங்கையர்களுக்கு எதிராக இந்த கூட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.

அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவின் உதவியுடன் இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

3 22 027.35 அமெரிக்க டொலர்கள் இரண்டு நபர்கள் ஊடாக மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால் ஜாலிய விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த பணத்தில் 250000 அமெரிக்க டொலர் பணம் இலங்கையின் பிரென்டன் சொய்ஸா என்ற நபருக்கு சொந்தமான PP International நிறுவனத்தின் ஊடாகவும், 82 027.35 அமெரிக்க டொலர் பணத்தை இலங்கையரான வினோத் பஸ்நாயக்க என்பவருக்கு சொந்தமான Paper Crown LLC நிறுவனத்தின் ஊடாகவும் மோசடி செய்தமை தொடர்பில் ஜாலிய விக்ரமசூரிய மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த Paper Crown LLC நிறுவனத்தின் உரிமையாளர் வினோத் பஸ்நாயக்க என்பவர் நாமலின் ஆதரவாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக 3 லட்சம் அமெரிக்க டொலர் மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதிலும், நாமல் மற்றும் வினோதனுக்கு எதிராக மில்லியன் கணக்கிலான அமெரிக்க டொலர் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.