கடற்றொழில் அமைச்சின் அதிரடி செயற்திட்டம்…!

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு செல்லும் மீனவர்கள் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களை கடலுக்கு கொண்டு செல்வதை தடை செய்ய கடற்றொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களினால் கடல் வளம் முதல் கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான செயல்களை தடுத்து வளமிக்க கடற் பிராந்தியத்தை உருவாக்கும் நோக்கிலேயே குறித்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.