கணவனை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம்! நீதிபதி சொன்னது இதுதான்

ஒரு பெண்ணுக்கு சூப்பர் மேன் தேவையில்லை, நல்ல கணவன் அமைந்தாலே போதும் என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருடன் திருமணமான பெண் ஒருவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பெண் தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பாலசுப்பிரமணியனுடன் சென்றுவிட்டார்.

இதனைத்தொடர்ந்து அப்பெண்ணின் கணவர் பாலசுப்பிரமணியன் மீது பெண் கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இதனால், முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்த பாலசுப்பிரமணித்தின் மனு விசாரணை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது.

இந்த விசாரணையில் அவர் கூறியதாவது, ஒருவருக்கொருவர் மதிப்பளித்து உறவை மேம்படுத்தவே நீதிபோதனைகள் கூறப்படுகின்றன.

எது சரி, எது தவறு என்று அறிந்து ஒவ்வொருவரும் அவரவர் குணநலன்களை வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த வழக்கில் திருமணமான பெண், சட்டவிரோத உறவு வைத்துக்கொண்ட மனுதாரருடன் தனது குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஓடிவிட்டார். இதனால் அந்த பெண்ணின் குடும்பம் சிதைந்துள்ளது.

அந்த பெண்ணை ஆஜர்படுத்தக்கோரி அவரது கணவர் ஏற்கனவே தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின்போது, கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் என்று அந்த பெண் கூறியதால் அந்த மனு முடித்து வைக்கப்பட்டதாக மனுதாரர் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

சினிமா பாணியில் நீதிமன்றம் செயல்பட இயலாது. இதற்கு முன்பு வரை விசாரணைக்கு ஆஜரான மனுதாரர் பாலசுப்பிரமணியன் இப்போது ஆஜராகவில்லை.

இதிலிருந்து அவர் இந்த பெண்ணுடனான உறவை தொடர விரும்பவில்லை என்று தெரிகிறது. இதனை அறிந்த இந்த பெண்ணும் கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஒரு பெண்ணுக்கு சூப்பர்மேன் தான் வேண்டும் என்பதில்லை. நல்ல கணவன் அமைந்தாலே போதும்.

இந்த வழக்கில் தொடர்புடைய பெண்ணுக்கு நல்ல கணவன் கிடைத்திருந்தபோதும், அந்த பெண்ணின் நடவடிக்கை ஏற்க கூடிய வகையில் இல்லை.

இந்த வழக்கின் மனுதாரர் ஏற்கனவே 2 பெண்களை ஏமாற்றி உள்ளார். இதனால் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது என கூறியுள்ளார்.