வெள்ளைப்படுதல் என்பது என்ன: தடுக்க என்ன செய்யலாம்?

பொதுவாக பெண்களுக்கு ஏற்படும் நோய்களில் ஒன்று தான் வெள்ளைப்படுதல், டீன் ஏஜ் முதல் 45 வயது வரை இந்த நோய் ஏற்படுகிறது.

இது உடல் வெப்பம், கர்ப்பப்பை கோளாறுகளின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.

வெள்ளைப்படுதல் என்பது என்ன?

பெண்களின் பிறப்புறுப்பு எப்போதும் ஈரப்பசை மற்றும் வழவழப்புடன் இருக்க வேண்டியதிருக்கிறது.

இது பிறப்புறுப்பின் தசைப் பகுதியில் இருந்தும், கருப்பையின் வாய் மற்றும் அதன் உட்சுவர்களில் இருந்தும் சிறிதளவு சுரந்து வருகிறது.

இதன் சுரப்பு அதிகமாகி விடும் போது அதனை வெள்ளைப்படுதல் என்று கூறுகிறோம்.625-0-560-350-160-300-053-800-668-160-90

அறிகுறிகள்
  • வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் நாற்றத்துடன் சளிபோல் வெளியேறுதல்
  • வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் உண்டாதல்
  • சிறுநீர் மிகுந்த எரிச்சலுடன் வெளியேறுதல்
  • வெள்ளைப்படும் காலங்களில் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி உண்டாகுதல்
காரணங்கள்
  • ரத்தசோகை
  • அதிக உஷ்ணம், அதீத சிந்தனை, காரம், உப்பு மிகுந்த உணவு
  • தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு
  • சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தல்
  • அதிக மன உளைச்சல்
என்ன செய்யலாம்?
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி தேவையான அளவு எடுத்து சூப் செய்து இரண்டு வாரம் தொடர்ந்து அருந்தி வந்தால், வெள்ளைப்படுதல் குணமாகும்.
  • வல்லாரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடலாம்.
  • அருகம்புல்லை எடுத்து சிறு சிறுதுண்டுகளாக நறுக்கி 4 குவளை நீரில் கொதிக்க வைத்து அது நன்கு வற்றி 1 குவளை ஆனவுடன் எடுத்து அதனுடன் மிளகுத்தூள் தேவையான அளவு பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
  • உலர்ந்த நெல்லிக்காயின் விதைகளை பொடி செய்து, மோருடன் கலந்து தினமும் இருவேளை பருகி வர நல்ல பலன் கிடைக்கும்.
  • 2 டீஸ்பூன் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி அந்நீர் குளிர்ந்ததும், அதனைக் கொண்டு யோனிப் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.
  • வாழைப்பழத்தை நெய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி தினமும் உட்கொண்டு வந்தாலும், வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கும்.
  • மாம்பழத்தின் தோலை அரைத்து அதனை யோனியில் தடவி வந்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.625-0-560-350-160-300-053-800-668-160-90-1