ஆதார் கார்டு இல்லாவிட்டால் திருப்பதி கோவிலுக்கு போக முடியாது. அதிர்ச்சி அறிவிப்பு

திருப்பதி திருமலையில் ஏற்கனவே வாடகை அறை பெறுதல், தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தல் ஆகியவற்றிற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இனிமேல் நடைபாதை மற்றும் தர்ம தரிசனம் வழியாக வரும் பக்தர்களுக்கும் ஆதார் அட்டையை இனி கட்டாயமாக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. எனவே இனிமேல் திருப்பதிக்கு கோவிலுக்கு ஆதார் அட்டை இல்லாதவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நடைபாதை பக்தர்களுக்கு அளிக்கும் டோக்கன் மூலம் தான் லட்டு முறைகேடு அதிக அளவில் நடைபெற்று வருவதாக தேவஸ்தானத்திற்கு அதிக புகார்கள் வந்துள்ளது.

எனவே லட்டு முறைகேட்டை தடுக்கவே ஆதார் கட்டாயம் என்ற நடைமுறையை விரைவில் அமல்படுத்தவுள்ளதாக தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

ஆதார் அட்டை இல்லாதவர்கள் தங்களிடம் உள்ள ஏதாவது ஒரு அடையாள அட்டையை கட்டாயம் திருமலைக்கு வரும்போது கொண்டு வர வேண்டும் என்றும் தேவஸ்தானம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அறிவித்துள்ளது.