பூண்டை ஒதுக்கி வைப்பவரா நீங்கள்?… இதைப் படிங்க பாஸ் முதல்ல…

இயற்கையாகவே பூண்டு ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பதால் இது பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் சிறந்த மருத்துவ பொருளாகவும் பயன்படுகிறது.

ஆனால் இந்த பூண்டை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக மென்று சாப்பிட்டால், அதன் முழுமையான பலனையும் நாம் பெறலாம்.

மேலும் இந்த பூண்டானது, நமது உடம்பில் உள்ள ஆன்ஜியோடென்சின் என்னும் ஹார்மோன் உற்பத்தியைத் தடுத்து, ரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்கிறது.

மருத்துவகுணம் நிறைந்த இந்த பூண்டை வறுத்து சாப்பிடுவதால், 24 மணி நேரத்தில் நமது உடம்பில் ஏராளமான பல அற்புதங்கள் நிகழ்கின்றது.

வறுத்த பூண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

* வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட, ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, நமது உடலுக்கு சிறந்த உணவாக மாறுகிறது.

* இரண்டு முதல் நான்கு மணி நேரத்தில் வருத்த பூண்டு நமது உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது.

* ஆறு மணி நேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படுவதுடன், நமது உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கரைக்கிறது.

* பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், நமது உடம்பின் இரத்த நாளங்களில் நுழைந்து, இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடச் செய்கிறது.

* பூண்டில் உள்ள ஆரோக்கியமான சத்துக்கள் நமது உடலால் உறிஞ்சப்படுகிறது. இதனால் பூண்டு நமது உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகிறது.

* கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்பட்டு, தமனிகளை சுத்தம் செய்கிறது. இதனால் இதய நோய்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது.

* நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, கனமான மெட்டல்கள் நமது உடம்பினுள் நுழைவதை தடுக்கிறது.

* எலும்புகளின் வலிமையை அதிகமாக்கி, உடலின் சோர்வுத் தன்மையை போக்கி, உடல் செல்களின் வாழ் நாட்களை நீட்டிக்கச் செய்கிறது.