செல்பி மோகம்: ஓடும் ரயிலில் பறிபோன இளைஞரின் உயிர்: நெஞ்சை உருக்கும் சம்பவம்

சென்னையில் ஓடும் ரயிலில் செல்பி எடுத்த இளைஞர் பரிதாபமாக மின்சார கம்பத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மின்சார ரயிலில் கிண்டியிலிருந்து தாம்பரத்திற்கு பயணித்த பார்த்தசாரதி, ரயிலில் தொங்கியவாறு தனது போனில் செல்பி எடுத்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பார்த்தசாரதி சிகிச்சை பலினின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

செல்பி மோகத்தால் இளம் வயதினர் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்து வரும் சம்பவம் தொடர்கதையாகியுள்ளது.