புதிதாக வீடு கட்டப்போகிறீர்களா? அப்போ இதைப்படிங்க

பொதுவாக நாம் புதிதாக வீடு கட்டும் போது, வாஸ்து சாஸ்திரம் என்று பல நன்மை பயக்கும் செயல்களை பற்றி நாம் தெரிந்துக் கொள்வோம்.

அதன் பின் புதிதாக வீடு கட்டப் போகும் இடத்தில், நாம் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளும் அந்த இடத்தில் கிடைக்குமா என்று ஆராய்வது அனைவருடைய இயல்பாகும்.

மேலும் நாம் வீடு கட்டப் போகும் இடத்தில் இருக்கும் மணலைப் பற்றி நன்கு ஆராய வேண்டும்.

ஏனெனில் கூழாங்கற்கள் நிறைந்த மணல், சிவப்பு நிறம் கலந்த மணல் என்று ஒவ்வொரு விதமான மணலுக்கும், வாஸ்து சாஸ்திரங்களில் பல அர்த்தங்கள் உள்ளது.

எனவே புதிதாக நாம் வீடு கட்டுவதற்கு முன்பு வாஸ்து சாஸ்திரங்களை மட்டுமின்றி, வீடு கட்டுவதற்கான நல்ல சகுனங்களையும் பார்க்க வேண்டும்.

வீடு கட்டும் போது எப்போதெல்லாம் சகுனம் பார்க்க வேண்டும்
  • வீட்டு மனைகளை தேர்ந்தெடுத்தல்
  • கட்டிட வேலைகளை தொடங்குதல்
  • வீட்டில் புதிதாக வாசற்படி வைத்தல்
  • வீட்டின் கிரகப்பிரவேசம் செய்தல்

நாம் வீடு கட்ட தொடங்கும் முன் இது போன்ற செயல்களில் நல்ல சகுனங்களைப் பார்க்க வேண்டும்.

ஏனெனில் சகுனம் என்பது நம் முன்னோர்களின் கருத்துப்படி, இறைவன் நமக்கு நடக்கப் போகும் எதிர்மறையான விளைவுகளை மறைமுகமாக உணர்த்துகிறார் என்று அர்த்தமாகும்.

எனவே இந்த சகுனம் பார்க்கும் செயலானது, நம் முன்னோர்களின் முடிவான நம்பிக்கையாக உள்ளது.

மேலும் பசுமாடு, யானை, வெள்ளைப் புறா, தேர்குதிரை, காளைமாடு, கன்னிப்பெண், இரட்டை பிராமணர்கள், தயிர், தாசி, பிஷ்பம், எரியும் நெருப்பு இது போன்றவற்றில் நம் முன்னோர்கள் நல்ல சுப சகுனங்களை எதிர்பார்ப்பார்கள்.